» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுயஉதவிக்குழுகவினர் வருமானம் ஈட்டுவதற்கான வழிவகைகள் செய்யப்படும் : ஆட்சியர் தகவல்

வியாழன் 2, மே 2024 5:38:25 PM (IST)



சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த வழிவகை செய்யப்படும் என்று  குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் திருவரம்பு வாழைநார் கைவினைபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (02.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருவட்டார் ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் கொடுத்துறை, முடவன்பொற்றை, ஆண்டிபொற்றை, தச்சமலை, தோட்டமலை, மாங்கமலை, மோதிரமலை, ஆலம்பாறை, வலியமலை கிள்ளிகோ உள்ளிட்ட 22 கிராமங்களை சேர்ந்த 300 பழங்குடியின மகளிர் உறுப்பினர்களாக சேர்ந்து திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினை ஆரம்பித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் மேல்குறிப்பிட்ட குக்கிராமங்களில் விளையும் நல்லமிளகு, கஸ்தூரி மஞ்சள், புளி, கிராம்பு, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பு (நவரபச்சிலை, குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை) உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு) போன்ற அனைத்து பொருட்களும் பழங்குடி விவசாயபெண் மகளிரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இயற்கையில் முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பினால் தோல் சம்மந்தமான அனைத்து வியாதிகளுக்கும் தீர்வு காணப்படுகிறது.

மேலும் திருவரம்பு கொல்வேல் பகுதியில் கார்மல் அன்னை சுயஉதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுவரும் வாழைநார் கைவினைப்பொருட்கள் தயாரிப்புக்களை நேரில் பார்வையிடப்பட்டது. மேலும் திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் திருவரம்பு சுயஉதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களை உள்வட்டாரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதன்மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் மற்றும் இப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் செலவினங்கள் குறித்தும் ஆராய்ந்து தீர்வு காணப்படும். மேலும் பழங்குடியின மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஸ்டாட்ஆப் நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபீ ஜான், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பொன் குமார், மாவட்ட விற்பனை மேலாளர் தங்கராஜ், மாவட்ட வள பயிற்றுனர் குளோறி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ராகுல், திட்ட இணை அலுவலர்கள் C.ஜிஜின் துரை, சுயஉதவிக்குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory