» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: சீன, ரஷ்ய தலைவர்களுடன் சந்திப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 10:41:28 AM (IST)

2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திகிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல்வேறு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்கள் வளர்ச்சி ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பலரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஏற்கனவே உள்ள கூட்டாண்மைகளை ஆழப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
