» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:51:01 PM (IST)
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான புதிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று பாராட்டியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், "அமெரிக்கா தற்போது உலகின் முதன்மை எரிசக்தி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் நமது நிலக்கரி மற்றும் எரிசக்தி ஏற்றுமதியை மிகப்பெரிய அளவில் உயர்த்தும். நமது நிலக்கரியின் தரம் உலகிலேயே சிறந்தது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்து கூறுகையில், இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாகச் சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு (MSME) அமெரிக்காவின் 30 டிரில்லியன் டாலர் சந்தையைத் திறந்து விட்டுள்ளது என்றார். இதன் மூலம் மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)


