» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு 270-க்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட கொடூர ஈஸ்டர் தினத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், எச்சரிக்கைகளைப் புறக்கணித்துத் தங்களது கடமையைச் செய்யத் தவறியதாக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (IGP) மற்றும் ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் செயலருக்குத் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையிலுள்ள பல தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர சொகுசு விடுதிகள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 45 வெளிநாட்டினர் உட்பட 279 பேர் உயிரிழந்தனர்; 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த அசம்பாவிதம் நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பே, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது குறித்து இந்திய உளவுத்துறை மூலம் இலங்கை அரசுக்கு முன்கூட்டியே முறைப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்திக் கடமை தவறியதாக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சகச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 2022-ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றம் இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தீவிரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பளித்த நீதிபதிகள்: "நாட்டின் குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதிலும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இவர்கள் இருவரும் தங்களது அடிப்படைப் பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறிவிட்டனர்" எனச் சுட்டிக்காட்டி, பூஜித் ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
இலங்கையில் 1976-ஆம் ஆண்டிற்குப் பிறகு மரண தண்டனை நடைமுறையில் நிறைவேற்றப்படாததால், மரண தண்டனை விதிக்கப்படுபவர்களின் தண்டனை வழக்கமாக ஆயுள் தண்டனையாக மாற்றப்படுவது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


