» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)
தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவதைத் தடுக்க வேண்டாம் என்றும், நிலங்களை ஒதுக்குவது குறித்து விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது, உயர்நிலையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதால் 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நிலங்களைக் கண்டறிவது குறித்துத் தெரிவிக்க 3 வார கால அவகாசம் மட்டும் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக, ஹிந்தி மொழியைக் காரணம் காட்டித் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை நிறுவ மறுப்பதாகவும், சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் செயல்படும் நிலையில் நவோதயா பள்ளிகளை மட்டும் எதிர்ப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது. இதைக் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், தமிழ்நாட்டில் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை, ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறார்கள் என விளக்கமளித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, மற்ற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் செயல்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நிலம் கண்டறிந்து வழங்க மறுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியது. மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமன்றி வேறு மொழிகளையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகும்.
அதேவேளையில், மும்மொழிக் கொள்கையை 6-ஆம் வகுப்பு முதல் தொடங்கி 9-ஆம் வகுப்பிற்குள் முடித்துவிட வேண்டும் என்றும், 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையைப் புகுத்துவது மாணவர்களுக்குப் பணிச்சுமையை அளிக்கும் என்றும் நீதிபதிகள் தங்களது அவதானிப்புகளைப் பதிவு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)


