» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் : மத்திய அரசு அறிவிப்பு

சனி 23, மார்ச் 2024 5:34:53 PM (IST)

இந்தியாவில் அடுத்த அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 31-ந்தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டி.ஜி.எப்.டி.) தெரிவித்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான விவகாரங்களை கையாளும் அமைச்சகத்தின் ஒரு அங்கமாக டி.ஜி.எப்.டி. செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory