» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழில் நுட்ப கோளாறு: அக்னிபான் ராக்கெட் நாளை ஏவப்படாது என அறிவிப்பு!

வியாழன் 21, மார்ச் 2024 4:38:43 PM (IST)

தொழில் நுட்ப கோளாறு காரணமாக அக்னிபான் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில் முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ருந்த நிலையில், 'அக்னிபான்' ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறு சீரான பின்பு விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory