» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

தினமும் 2 பேரிச்சம்பழம் வீதம் 10 நாட்கள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர்.

இது ஓர் அரும்பெரும் மருத்துவ உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடற்சக்தியை வலுப்படுத்த பேரிச்சம் பழம் உதவுகின்றது. பெண்கள் தொடர்ந்து 10 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் உண்டு வர முடிவு செய்தார். 10 நாட்களின் முடிவில், இந்த பெண்மணியின் உடல் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு இருந்தது.

தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் 10 நாட்கள் கழித்து பெண்ணிடம் ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும்.

10 நாட்களுக்கு தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்ததால், குடல் இயக்கம் சிறப்பாக இருக்கும்.

10 நாட்களில் செரிமானம், வாயுத்தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, பெருங்குடல் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக சிறந்து விளங்கும்.

இது வலிநிவாரணியாகவும், கை கால் வீக்கத்தை குறைக்கவும் பெருமளவு உதவி செய்யும்.

பேரிச்சம் பழத்தில் இருக்கும் மெக்னீசியம் இதய நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கும்.
பேரிச்சம்பழத்தில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

இதய நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவி செய்யும். தொடர்ந்து பேரிச்சம்பழம் உண்டு வருவது 10% ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்கும்.

பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கும். இதனால், ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் அதிகரிக்கும்.

மேலும், கர்ப்பிணிப்பெண் வலி இன்றி சுகப்பிரசவம் அடைய, கடைசி மாதம் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம் என கூறப்படுகிறது.

பேரிச்சம்பழம் பிரசவத்திற்கு பிறகான உடல் எடையை குறைக்கவும் பலனளிக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory