» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

பப்பாளி விதைகளில் மருத்துவ குணங்கள்: ​எப்படி சாப்பிட வேண்டும்?



பப்பாளி நிறைய நோய் தீர்க்கும் அற்புதங்களைச் செய்வது என்பது நமக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக நீரிழிவு பிரச்சினை முதல் ரத்த விருத்தி, ரத்தத்தை சுத்தம் செய்வது ஆகிய பல விஷயங்களுக்கு பப்பாளி ஓர் அருமருந்து. 

ஆனால் பப்பாளியின் விதையை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. பப்பாளி பழத்தில் இருப்பதைப் போலவே பப்பாளியின் விதையிலும் ஏராளமாக மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள். கீழே தூக்கி எறியும் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிற பொழுது, நாம் ஏன் கீழே தூக்கி வீச வேண்டும். 

இந்த பப்பாளி விதைகளில் அப்படி என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

*சுவை

*எடையைக் குறைக்க

*​தொற்றுக்கள் பரவாமல்

*​குடல் மற்றும் வயிற்று பிரச்சினை

*பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது

*​கொழுப்பை கரைக்க

​எப்படி சாப்பிடலாம்?

முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும். ஏனென்றால் தொடக்கத்தில் சிலருக்கு அது வயிற்றுப் போக்கை உண்டாக்குவதாக இருக்கலாம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை.

ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம். பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிங்கள். முடிந்தவரையில் வெ்ளளை சர்க்கரையை தவிர்க்கலாம்.

பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory