» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

குடலை சுத்தமாக்க உதவும் ஆரோக்கிய குறிப்புகள்.

ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் ஒரு நாளைக்கு 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

நம் குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் சரியாகும். கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும். ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் குடல் சுத்தமாகும்.குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.

அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory