» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்
ஹார்ட்டுக்கும் நல்லது -தர்ப்பூசணி!

தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் டெய்லி செஞ்சுரி அடித்து வருகிறது. அதிலும் வழக்கம் போல் இந்த வருடத்திலும் எகிறும் அதீத வெயில் தாக்கத்தால் வீட்டின் மொட்டை மாடியில் ஆம்லேட் போடும் அளவிற்கு அனல் பறக்கிறது. இதனால் உடல் சூடு அதிகரிக்கிறது, உடலில் நீர் வறட்சி உண்டாகிறது. எனவே, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்க வேண்டியது தலையாய கடமையாகிவிட்டது.
இப்படி கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் எல்லோரது உச்சி மண்டையையும் குளிர்விக்க இளநீர், நுங்கு போன்றவை அதிகம் விற்பனையாகின்றன. அத்துடன் பளிச்சென்ற பச்சை மற்றும் சிவப்பு கெட்டப்பில் தர்ப்பூசணியும் தெருவுக்கு தெரு குவிந்து கவர்ந்திழுக்கிறது. இந்த தர்ப்பூசணி மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. சி வைட்டமினும் அதிகம் இருக்கிறது.
இதனிடையே இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கால்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ள சிலர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இரு குரூப்பாக பிரிக்கப்பட்டனர். ஒரு குரூப்பினர் தினமும் ஒரு தர்ப்பூசணி மாத்திரை சாப்பிட்டனர். 2 -வது குரூப்புக்கு டம்மி மாத்திரை கொடுக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டது. தர்ப்பூசணி மாத்திரை சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது.
இதையடுத்து, "மாரடைப்பு, ஸ்டிரோக் ஏற்பட மிக முக்கிய காரணம் அதிக ரத்த அழுத்தம்தான். இந்த தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது. இதனால், உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப வேண்டிய இதயத்தின் வேலை சுலபமாகிறது. அப்படி ஹார்ட்டின் வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே, இதயம் நீண்ட காலம் டிரபிள் கொடுக்காமல் இயங்கும்” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
* அத்துடன் வேறு எதிலும் இல்லாத அளவுக்கு மிகுதியாக வைட்டமின் ஏ, சத்து தர்ப்பூசணியில் உள்ளது. 100 கிராம் தர்ப்பூசணியில் 569 மில்லிகிராம் வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண் பார்வைத் திறனுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் அத்தியாவசியமாகும். சருமத்திற்கு பொலிவு தரும். நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதிலும் வைட்டமின் ஏ பங்கெடுக்கிறது.
* புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் லைக்கோபின் நிறமி தர்ப்பூசணியில் மிகுதியாக உள்ளது.
* பொட்டாசியம் தாது தர்ப்பூசணியில் நிறைந்துள்ளது. இது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் முடக்குவாதம், இதய பாதிப்புகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கெடுக்கிறது.
* வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1, வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும், மாங்கனீசு தாதுவும் சிறந்த அளவில் கிடைக்கிறது. வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். உடலை நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படுத்துவதோடு, தீமை பயக்கும் பிரீ-ரேடிக்கல்களை துப்புரவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
makkalMar 27, 2018 - 05:15:19 PM | Posted IP 162.1*****
welcome
samsunJun 6, 2017 - 04:29:39 PM | Posted IP 103.2*****
thankyou
IMMANUEL,THOOTHUKUDIFeb 7, 2020 - 02:31:27 PM | Posted IP 173.2*****