» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்
வாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க
தமிழ்நாட்டில் மே மாதத்தில் கொளுத்தவேண்டிய வெயில் ஏப்ரலிலேயே சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இளைஞர்களே சுருண்டுவிழும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.முதியோர்கள், சிறுவர்கள், பெண்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான டிப்ஸ்கள் பின்வருமாறு,
- பகல் வேளைகளில் வெயிலில் செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
- தேவையான அளவு நீர் அவ்வப்பொழுது அருந்த வேண்டும்.
- கனம் குறைந்த ஆடைகள், நுண்ணிய பருத்தி ஆடைகள் அணியவது நல்லது. ஆடையை இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டும். வேயில் வேளையில் வெளியில் செல்லும் போது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு கண்;ணாடிஃகுடைஃதொப்பி, காலணிகள் அணிந்து செல்வது நல்லது.
- வெப்பம் அதிகமாக இருக்கும் போது குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கடினமான வேலைகளை திறந்த இடங்களில் தவிர்ப்பது நல்லது.
- பயணத்தின்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
- வெயில் காலங்களில் மது, டீ, காப்பி, ரசாயனம் நிறைந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். அவை உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும்.
- அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிக வெயில் நேரத்தில் நிறுத்தி வைத்த வாகனங்களின் அருகாமையில் குழந்தைகள்ஃசெல்ல பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம்.
- மயக்கம் அல்லது உடல் நலக்குறைவு ஏற்படுவதாக அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- Oral Rehydration Solution (ORS),பொதுவாக வீட்டில் தயார் செய்த லசி, மோர், கஞ்சி தண்ணீர், எலுமிச்சை பானம், பால் போன்றவை அருந்தலாம். இவை உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
- பொதுவாக வீட்டை குளுமையாக வைத்திருக்க வேண்டும். வெப்ப காலங்களில் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது நல்லது.
- உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதற்காக மின் விசிறி, ஈரமான துணிகள் உபயோகப்படுத்தலாம்.குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
- வீட்டில் வளர்க்கும் பிராணிகளை நிழலில் தங்க வைப்பதோடு அவைகளுக்கு, அவைகளுக்கு அவ்வப்பொழுது குடிக்க நீர் கொடுக்க வேண்டும்.
வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்கான எளியமுறை குறிப்புகள்
- கடும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மயக்கம் அடைந்த நபரை குளுமையான இடத்தில் (நிழலில்) படுக்க வைக்க வேண்டும். ஈரத்துணியினால் அவ்வப்பொழுது துடைக்க வேண்டும் ஃ கழுவ வேண்டும்.உடலின் வெப்பநிலை குறைவு செய்வதற்காக சாதாரண தண்ணீர் தலை, முகத்தின் மீது தெளித்திட வேண்டும்.
- கடும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட , மயக்கம் அடைந்த நபருக்கு Oral Rehydration Solution (ORS), எலுமிச்சை சாறு ஃ கஞ்சி அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் பானங்கள் (பழச்சாறு போன்றவை) பருகிட கொடுக்கலாம்.
கடும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃ மயக்கம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும்.மயக்கம் அடைந்த நபருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொடுப்பதின் மூலம் அவர்களை கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
மக்கள் கருத்து
MAKKALJun 6, 2017 - 04:28:49 PM | Posted IP 103.2*****
ok
ராணிமே 26, 2016 - 05:05:40 PM | Posted IP 103.5*****
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
RAMAJan 24, 2018 - 11:28:49 AM | Posted IP 117.2*****