» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல் டி20 கிரிக்கெட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், துணை தலைவர் டாக்டர் மகிழ் ஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த டி 20-கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணியும் - ஸ்டான்லி பில்டர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்டான்லி பில்டர்ஸ் அணி 20-ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய டிசிடபிள்யூ அணி நிர்ணயம் 13 ஓவர்களில் 2-விக்கெட் இழப்பிற்கு 113-ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு ரூ.40-ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 20-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டினர் ராஜாபோஸ் ரீகன் மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில சீனியர் ஹாக்கி: நெல்லை, கோவை அணிகள் வெளியேற்றம்!
புதன் 13, மே 2026 8:10:56 AM (IST)

மில்லர் - அக்சர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!
செவ்வாய் 12, மே 2026 12:22:26 PM (IST)

மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி
செவ்வாய் 12, மே 2026 8:07:02 AM (IST)

13 பந்து 50 ரன் - மிரட்டிய உர்வில்: லக்னோவை வெளியேற்றிய சிஎஸ்கே!
திங்கள் 11, மே 2026 5:17:01 PM (IST)

ஒரே ஆண்டில் மூன்று டி20 சதங்கள்: பின் ஆலன் உலக சாதனை!
சனி 9, மே 2026 5:32:31 PM (IST)

டெல்லியைச் சிதறடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் அதிரடியில் அபார வெற்றி!
புதன் 6, மே 2026 10:25:41 AM (IST)


