» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)

ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஐபிஎல்லில் 60வது லீக் போட்டியில் நேற்று டெல்லி, குஜராத் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் ஃபாப் டூப்ளெஸிஸ் 5 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணை சேர்ந்து ஆடிய அபிஷேக் பொரெல் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின், ராகுலுடன், கேப்டன் அக்சர் படேல் இணை சேர்ந்தார். இவர்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில், அக்சர் படேல் (25 ரன்) அவுட்டானார்.
அதையடுத்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வந்தார். சிறிது நேரத்தில், ராகுல் சதம் (60 பந்து) கடந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி, 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தார். இறுதியில் 19 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றிபெற்றது. இறுதிவை ஆட்டமிழக்காமல் சாய் சுதர்சன் 108 ரன்கள், சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து, குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பிளேஆப் தகுதி பெற்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)


.gif)