» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு

வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)



சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டும் கேப்டனாக விளையாடி வந்தார். ஆனால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி இழந்தது. இந்தத் தொடர்களில் ரோகித் ஷர்மாவின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதில், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory