» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கில், சாய் சுதர்சன் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 10:52:36 AM (IST)

ஐபிஎல் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை அதன் சொந்த மண்ணில் வென்றது.
முதலில் குஜராத் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்க்க, கொல்கத்தா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களே எடுத்தது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை சாய் சுதா்சன் - கேப்டன் ஷுப்மன் கில் தொடங்கினா். உறுதியாக அமைந்த இந்தக் கூட்டணி, கொல்கத்தா பௌலா்களை திணறடித்தது.
முதல் விக்கெட்டுக்கே 114 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பை, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 13-ஆவது ஓவரில் உடைத்தாா். சுதா்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஒன் டவுனாக வந்த ஜாஸ் பட்லா், தனது பங்குக்கு விளாச, கில்லுடனான அவரின் 2-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 58 ரன்கள் கிடைத்தது. இந்நிலையில், அதிரடி விளாசலுடன் சதத்தை நெருங்கிய கில் சாய்க்கப்பட்டாா்.
55 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 90 ரன்களுக்கு அவா் வெளியேற, 4-ஆவது பேட்டராக வந்த ராகுல் தெவாதியா டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் பட்லா் 8 பவுண்டரிகளுடன் 41, ஷாருக் கான் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் அரோரா, ஆண்ட்ரே ரஸ்ஸெல், ஹா்ஷித் ராணா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னா் 199 ரன்களை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், கேப்டன் அஜிங்க்ய ரஹானே மட்டும் போராடி ரன்கள் சோ்த்தாா். 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு அவா் ஆட்டமிழக்க, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
இதர பேட்டா்களில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 1, சுனில் நரைன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17, வெங்கடேஷ் ஐயா் 14, ரிங்கு சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, ரமண்தீப் சிங் 1, மொயீன் அலி 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
ஓவா்கள் முடிவில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஹா்ஷித் ராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், இஷாந்த் சா்மா, வாஷிங்டன் சுந்தா், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 என அனைத்து பந்துவீச்சாளா்களும் விக்கெட் எடுத்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிட்செல் சதம்: 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி
வியாழன் 15, ஜனவரி 2026 8:57:19 AM (IST)

வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் இணையும் மாற்று வீரர்...!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:40:51 AM (IST)

விராட் கோலி புதிய சாதனை: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி
திங்கள் 12, ஜனவரி 2026 8:25:58 AM (IST)

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

