» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரசிகர்களால் 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ் இணைந்துள்ளார்.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.இந்நிலையில் நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரசிகர்களால் 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும் அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ் கடந்த சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்நிலையில் சென்னை அணி அவரை ரூ.2.2 கோடிக்கு ஒப்பந்த செய்ய உள்ளது. இவர் சென்னை அணியின் அடுத்த போட்டியான மும்பைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் (20-ம் தேதி) சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிட்செல் சதம்: 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி
வியாழன் 15, ஜனவரி 2026 8:57:19 AM (IST)

வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் இணையும் மாற்று வீரர்...!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:40:51 AM (IST)

விராட் கோலி புதிய சாதனை: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி
திங்கள் 12, ஜனவரி 2026 8:25:58 AM (IST)

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

