» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்!
ஞாயிறு 17, செப்டம்பர் 2023 7:19:12 PM (IST)

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஆசியக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 23 ரன்களுடனும், ஷுப்மன் கில் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆசியக் கோப்பையில் இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
