» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)
ஐசிசி தரவரிசையில் ஒன்டே கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி மதிப்பீட்டு புள்ளிகளை 122 முதல் 124 ஆக உயர்த்தியுள்ளது.
நியூஸிலாந்து (109), ஆஸ்திரேலியா (109), இலங்கை (104), பாகிஸ்தான் (104), தென் ஆப்பிரிக்கா (96), ஆப்கானிஸ்தான் (91), இங்கிலாந்து (84), மேற்கு இந்தியத் தீவுகள் (83), வங்கதேசம் (76) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
டி 20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. முதல் முறையாக வருடாந்திர டி 20 தரவரிசையில் உலகில் உள்ள 100 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 8 ஆட்டங்கள் விளையாடி அணிகள் தரவரிசை பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), தென் ஆப்பிரிக்கா (111), இந்தியா (105), நியூஸிலாந்து (95), இலங்கை (87), பாகிஸ்தான் (78), மேற்கு இந்தியத் தீவுகள் (73), வங்கதேசம் (62), அயர்லாந்து (30) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)


.gif)