» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் தடகளப் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
வியாழன் 7, செப்டம்பர் 2023 8:03:36 PM (IST)

தூத்துக்குடியில் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்த தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று துவக்கிவைத்து சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், தலைமை ஆசிரியை சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
