» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி - ஐசிசி இரங்கல்

திங்கள் 16, மே 2022 3:07:35 PM (IST)ஆஸி. கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு ஐசிசி இரங்கல் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46).  டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குயின்ஸ்லேண்ட் போலீசார் கூறுகையில், சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர்.  ஆனால், அதில் பலனில்லை என தெரிவித்துள்ளார்.  நடப்பு ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஐசிசி இரங்கல் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory