» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து

செவ்வாய் 19, அக்டோபர் 2021 10:25:02 AM (IST)



4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய குர்டிஸ் கேம்பரின் அபாரமான பந்துவீச்சால் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி

அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 15.1 ஓவர்களில் 3 விக்ெகட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து வெற்ற பெற்றது. இதன் மூலம் ஏ பிரிவு தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அயர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் குர்டிஸ் ஹேம்பர் 4 ஓவர்கள் வீசிய 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.இந்த 4 விக்கெட்டுகளுமே 4 பந்துகளில் ஹேம்பர் வீழ்த்தினார். ஆல்ரவுண்டர் குர்டிஸ் இதற்கு முன் 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியஅனுபவம் உடைவர். இது இவருக்கு 5-வது போட்டியாகும்.அவரின் 5-வது ஆட்டத்திலேயே குர்டிஸ் ஹாட்ரிக் மட்டுமல்லாது, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஹேம்பர் வீசிய 10-வது ஓவரின் 2வது பந்து முதல் 5-வது பந்துவரை தொடர்ந்து 4 விக்கெட்டுகளை சாய்த்து நெதர்லாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினார். 2-பந்தில் ஆக்கர்மேன்(11), அடுத்துவந்த டஸ்சாட்(0), விக்ெகட் கீபப்ர் எட்வார்ட்ஸ்(0) இருவரும் கால்காப்பில் வாங்கி ெவளியேறினர், 5-வது பந்தில் வேன் டெர் மெர்வ் க்ளீன் போல்டாகி ஆட்டழந்தார். 4 பந்துகளிலும் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹேம்பர் டி20உலகக் கோப்பைப் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தினர்.

இதற்கு முன் டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை 2பேர் வீழ்த்தியிருந்தனர். 2019ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆப்கன் வீரர் ரஷித் கானும், 2019ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராகஇலங்கை வீரர் மலிங்காவும் வீழ்த்தியிருந்தனர். 3-வதாக அயர்லாந்து வீரர் ஹேம்பர் இணைந்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது பந்துவீ்ச்சாளர் எனும் பெருமையையும் ஹேம்பர் பெற்றார். இதற்கு முன் 2007ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஆஸி. வேகப்புயல் பிரட் லீ ஹாட்ரிக் வீழ்த்தியதே இதுவரை டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாதனையாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory