» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ராகுல், கிஷன் அதிரடி : பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
செவ்வாய் 19, அக்டோபர் 2021 10:13:40 AM (IST)

ராகுல், கிஷன் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐசிசி அகாதெமி மைதானத்தில் நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியின் பயற்சி ஆட்டத்தில் இந்திய, இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 18 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தாலும், பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் அதிரடியாக விளையாடினர். 36 பந்துகளை எதிர்கொண்ட ஜானி பேர்ஸ்டோ 49 ரன்களையும் 20 பந்துகளை எதிர்கொண்ட லியம் லிவிங்ஸ்டன் 30 ரன்களையும் எடுத்தனர். 20 பந்துகளில் 43 ரன்களை எடுத்த மொயின் அலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பாக வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி 40 ரன்களை விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிறப்பாக பந்து வீசிய வேகபந்து வீச்சாளர் பும்ரா 26 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். 189 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கே. எல். ராகுல், இஷான் கிஷன் ஜோடி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. 24 பந்துகளில் 52 ரன்களை எடுத்த ராகுல் மார்க் வூட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர், களமிறங்கிய கோலி 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்த போதிலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிஷன் 46 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். பின்னர், சிறிய காயம் காரணமாக கிஷனால் போட்டியை தொடர முடியாமல் போயிற்று. இருப்பினும், பொறுப்பாக விளையாடிய பந்த் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 29 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி, மார்க் வூட், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். ஆறு பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 192 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)


.gif)