» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
எங்கள் வெற்றியை மழை பறித்துவிட்டது: விராட் கோலி பேட்டி
திங்கள் 9, ஆகஸ்ட் 2021 5:27:53 PM (IST)

எங்களது வெற்றியை மழை பறித்து விட்டது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 183, இந்தியா 278 ரன் எடுத்தன. 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 85.5 ஓவர்களில் 303 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஜோ ரூட் 109 ரன் அடித்தார். இதையடுத்து 209 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன் எடுத்திருந்தது. 5ம் நாளான நேற்று அடைமழை பெய்ததால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதனால் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் மழையால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜோ ரூட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டி முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: 5வது நாளில் இலக்கை நோக்கி ஒரு நல்ல வேகத்தை எதிர்பார்த்தோம்.
தொடரை நாங்கள் வலுவாகத் தொடங்க விரும்பினோம், இந்த டெஸ்ட்டில் வெற்றி வாய்ப்பு இருப்பதை நிச்சயமாக உணர்ந்தோம். நாங்கள் 40 ரன்கள் முன்னிலையை எதிர்பார்த்தோம். ஆனால் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களால் முதல் இன்னிங்சில் 95 ரன் முன்னிலை பெற முடிந்தது. அவர்கள் பேட்டிங்கில் சிறந்த வேலையைச் செய்தனர். இது முன்னோக்கி செல்லும் ஒரு டெம்ப்ளேட்டாக இருந்திருக்கும், இந்தியா-இங்கிலாந்து எப்போதும் போல இது ஒரு அற்புதமான தொடராக இருக்கும், என்றார்.
ஆட்டநாயகன் ஜோ ரூட் கூறுகையில், வானிலை மிகவும் சுவாரஸ்யமான இறுதி நாளாக இருந்ததை சீர்குலைத்தது. விளையாடுவதற்கும் பார்ப்பதற்கும் சிறந்த டெஸ்ட் போட்டியாக இருந்திருக்கும். இப்போட்டியில் நாங்கள் நிச்சயமாக வெல்ல முடியும் என்று நம்பினோம். 40 ஓவர் விளையாடி இருந்தால் கூட எங்களுக்கு உற்சாகமான ஒன்றைக் கொடுத்திருக்கலாம். இந்த வாரம் நாங்கள் செய்த சில நல்ல விஷயங்களை மீதமுள்ள தொடருக்கு எடுத்துச் செல்லலாம் என்று நம்புகிறோம், என்றார். 2வது டெஸ்ட் வரும் 12ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
புதன் 17, செப்டம்பர் 2025 10:58:42 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)
