» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
17 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டில் இந்தியா தோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:27:10 PM (IST)

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். மார்ஷ் 11 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
40 பந்துகளை சந்தித்த நிலையில் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஷார்ட்- ரென்ஷா ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ஷார்ட்சுக்கு 2 கேட்சுகளை இந்திய அணியினர் மிஸ் செய்தனர். இதனால் அவர் அரை சதம் கடந்ததுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அலெக்ஸ் ஹேரி 9 ரன்னிலும், ரென்ஷா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து கானலி- மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கானலி அரை சதம் அடித்து அசத்தினார். ஓவன் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேவியர் பார்ட்லெட் 3, ஸ்டார்க் 4 ரன்னில் வெளியேறினர்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:29:04 PM (IST)

அணியில் தொற்றிக் கொண்டிருக்க கூடாது: ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ்!
புதன் 22, அக்டோபர் 2025 4:25:21 PM (IST)

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் அடுத்த 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது
புதன் 22, அக்டோபர் 2025 12:37:34 PM (IST)

மே.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:54:13 AM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)
