» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது இந்தியா!

வெள்ளி 24, அக்டோபர் 2025 11:06:44 AM (IST)



மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நவி மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் மோதின. இதில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 53 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் அரையிறுதிக்கு 4-வது அணியாக இந்தியா முன்னேறி உள்ளது.

முதலில் பேட் செய்த இந்​திய அணிக்கு ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. தனது 14-வது சதத்தை விளாசிய ஸ்மிருதி மந்​தனா 95 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் எடுத்த நிலை​யில் பேட்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

முதல் விக்​கெட்​டுக்கு ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஜோடி 33.2 ஓவர்​களில் 212 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஜெமிமா ரோட்​ரிக்​ஸும் மட்​டையை சுழற்​றி​னார்.மறு​புறம் சீராக ரன்​கள் சேர்த்த பிர​திகா ராவல் தனது 2-வது சதத்தை விளாசி அசத்​தி​னார். சிறப்​பாக பேட் செய்து வந்த அவர், 134 பந்​துகளை சந்​தித்து 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 122 ரன்​கள் விளாசிய நிலை​யில் கெர் பந்​தில் வெளி​யேறி​னார்.

இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 10 ரன்​களில் ரோஸ்​மேரி பந்​தில் அவுட் ஆனார். இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்த நிலை​யில் மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 55 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும், ரிச்சா கோஷ் 4 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

மழை நின்​றதும் சுமார் 2 மணி நேரம் கழித்து ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டது. இந்​திய அணி​யின் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​த​தாக​வும் டக்​வொர்த் லீவிஸ் விதிப்​படி இலக்கு மாற்றி அமைக்​கப்​படு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.இதன்​படி நியூஸிலாந்து மகளிர் அணி 44 ஓவர்​களில் 325 ரன்​கள் எடுக்க வேண்​டும் என இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இலக்கை நோக்கி விளை​யாடிய நியூஸிலாந்து அணி 44 ஓவர்களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் லீக் சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி உடன் இந்தியா அரையிறுதியில் விளையாடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory