» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டு பிளெசிஸ் திடீர் ஓய்வு

புதன் 17, பிப்ரவரி 2021 12:47:57 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

2012-13-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன டு பிளெசிஸ், அறிமுக ஆட்டத்திலேயே பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி கடுமையாக முயற்சி செய்து ஆட்டத்தை டிரா செய்தார். 78 மற்றும் 110* ரன்கள் எடுத்ததால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். 36 வயது டு பிளெசிஸ், 69 டெஸ்டுகளில் விளையாடி, 10 சதங்கள், 21 அரை சதங்களுடன் 4163 ரன்கள் எடுத்துள்ளார். டி வில்லியர்ஸுக்குப் பிறகு 2016-ல் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஆனார். 36 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கினார். கடந்த வருடம் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 1-3 எனத் தோற்றதால் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். கேப்டனாக 18 வெற்றிகளும் 15 தோல்விகளையும் அடைந்துள்ளார். 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் டு பிளெசிஸ். 143 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள டு பிளெசிஸ், இந்த இரு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட முடிவெடித்துள்ளார்.  அடுத்த இரு வருடங்களிலும் இரு டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே என்னுடைய கவனம் இதன்மீது திரும்பியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள டி20 போட்டிகளில் விளையாடி இதில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறேன். தற்போதைக்கு டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று டு பிளெசிஸ் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory