» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறார் முதல்வர் விஜய் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 4, ஜூலை 2026 8:47:38 AM (IST)
முதலமைச்சர் விஜய் சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துவதாக திமுக தலைபர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். இக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:"முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருப்பது இந்த ‘டேக் டைவர்ஷன்’ அரசின் திசைதிருப்பும் நடவடிக்கையாகும். தொகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்."
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பெண் ஒருவர் கொடுத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு, அனிதா ராதாகிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அவசரத்தைக் காட்டுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் நடைபெறும் குற்றங்களைத் தடுக்காமல், விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து காலத்தைக் கடத்த முதலமைச்சர் நினைக்கிறார் என்றும், "ஆணவம் அழிவிற்கு வழி" என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதேபோன்று, இக் கைது நடவடிக்கையைக் கண்டித்துக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களது பலத்த கண்டனக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள், குழந்தைகள் குறித்து அரசுக்கு அக்கறையில்லை: கனிமொழி சாடல்!
புதன் 8, ஜூலை 2026 5:09:17 PM (IST)

இப்போது தேர்தல் வந்தாலும் விஜய் 180 இடங்களில் ஜெயிப்பார்: வைகோ பேட்டி!
புதன் 8, ஜூலை 2026 4:21:22 PM (IST)

கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது : வங்கி மேலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 8, ஜூலை 2026 4:05:56 PM (IST)

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:22:30 PM (IST)

குதிரை பேரம் விவகாரம்: செந்தில் பாலாஜி முன் ஜாமீன் மனு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு!
புதன் 8, ஜூலை 2026 12:55:44 PM (IST)

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 839 பணியிடங்கள் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
புதன் 8, ஜூலை 2026 12:11:31 PM (IST)


