» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் : மக்களோடு மக்களாக ஓடிய முதல்வர் விஜய்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:21:55 AM (IST)

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து தானும் அந்த ஓட்டத்தில் பங்கேற்றார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (ஜூன் 26) விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தினை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு மாரத்தானைத் தொடங்கி வைத்ததுடன் நின்றுவிடாமல், பொதுமக்களோடு மக்களாக இணைந்து முதலமைச்சர் விஜய்யும் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன் ஆகியோரும், டிஜிபி, காவல் ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)


