» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி லஞ்சம் தர முயன்று, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 3 பேரைச் சென்னைத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான என்.இளையராஜாவைச் சில தினங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்ற நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். தான் இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் (IPDS) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கியக் கட்சியின் வேண்டுகோளின் பேரில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்குச் சன்மானமாக ரூ.35 கோடி தருவதாகவும் ஆசைவார்த்தை காட்டியுள்ளார். இதற்கு எம்எல்ஏ இளையராஜா மறுப்புத் தெரிவிக்கவே, இத்தகவலை வெளியே கூறினால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் எனத் திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் சட்டப்படி நடவடிக்கை கோரிப் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் டி-1 (D1) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிரப் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில், இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் சகோதரருக்குத் தொடர்பு?
காவல்துறையினரின் தொடர் விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமார், இந்த வழக்கில் கைதாகியுள்ள நரேஷைச் சென்னையில் சந்தித்துப் பேசியது தெரியவந்துள்ளது.
வி.செந்தில்பாலாஜி மற்றும் வி.அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே, திருநாவுக்கரசு தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பேரம் பேசியது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவ்வழக்கு குறித்துத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)

முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)


