» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறான வகையிலும் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மானு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)



சந்திரன்Jul 1, 2026 - 01:57:57 PM | Posted IP 172.7*****