» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - 3 பேர் கைது!
சனி 20, ஜூன் 2026 8:08:02 AM (IST)
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவியைக் காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (19). இவர், திருச்செந்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வரும் மாணவியைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த புதன்கிழமை அன்று ஆத்திக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சஞ்சய்யின் நண்பர்களான கச்சனாவிளை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த உபேஷ் தர்மா (21) மற்றும் உடன்குடி முத்துநகரைச் சேர்ந்த முத்தரசன் (18) ஆகிய இருவர் தயாராக வந்து காத்துக் கொண்டிருந்தனர். பின்னர் இந்த மூன்று வாலிபர்களும் சேர்ந்து, அந்த மாணவியைக் கட்டாயப்படுத்தி அருகில் உள்ள கருமேனி ஆற்றங்கரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளனர்.
அப்போது ஆற்றங்கரைப் பகுதியில் வாலிபர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்த அந்தப் பகுதி பொதுமக்கள், உடனடியாக அங்குச் சென்று அந்த 3 பேரையும் மடக்கிப் பிடித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாயசாந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுத்துச் சஞ்சய், உபேஷ் தர்மா, முத்தரசன் ஆகிய மூன்று பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து சிறையிலடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஒரே நாளில் சிவகங்கை டூ மதுரைக்கு மாற்றப்பட்ட ஆட்சியர்!
சனி 20, ஜூன் 2026 3:58:57 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.245.85 கோடி திட்டப்பணிகள் ரத்து : அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 20, ஜூன் 2026 3:44:34 PM (IST)

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுப் பள்ளி வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ்: அண்ணாமலை கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 12:01:49 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)


