» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:30:56 AM (IST)
எட்டயபுரம் அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அருண்ராஜ் (32), டிரைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 30.04.2015 அன்று அருண்ராஜ், வீரமுத்து அம்மாள் (65) என்ற மூதாட்டியின் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது கிரிக்கெட் பந்து வீரமுத்துவின் வீட்டிற்குள் விழுந்ததால், அதை எடுக்கச் சென்ற அருண்ராஜை மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்ராஜ், வீரமுத்துவைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மறுநாள் வீரமுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அருண்ராஜ் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று அவரைப் பயமுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஊர்ப் பெரியவர்களிடம் வீரமுத்து புகார் அளித்ததால், அவர்கள் அருண்ராஜைக் கண்டித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையே கடுமையான முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வடக்கு முத்துலாபுரத்தில் உள்ள தோட்டம் அருகே வீரமுத்துவும், அவரது உறவினர் காளியம்மாளும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுப் பகுதியில் மறைந்திருந்த அருண்ராஜ், வீரமுத்துவை வழிமறித்துக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். மேலும், தடுத்த காளியம்மாளையும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி மிரட்டல் விடுத்துத் தப்பியோடினார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்ராஜைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை முழுமையாக விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று அதிரடி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பூங்குமார் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)


