» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொறியாளர் கவின் கொலை வழக்கு: குற்றவாளியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் வழக்கில், கைதான குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கவினின் உறவினர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐடி பொறியாளர் கவின் செல்வகணேஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், கவினின் காதலியின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது ஜாமீனை உடனே ரத்து செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மற்றும் கவினின் தாய், உறவினர்கள் திரண்டு வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கவின் செல்வகணேஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் எஸ்ஐ சரவணனுக்கு வழங்கப்பட்ட பிணையை உடனே ரத்து செய்ய, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வழக்கைச் சிறப்பாக நடத்தத் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை சிறப்பு வழக்கறிஞராக உடனே நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு உடனடியாக 'ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சிறப்புச் சட்டம்' இயற்ற வேண்டும். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற முக்கியக் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு:
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கத் தூத்துக்குடி காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு விதிகளின்படி, போராட்டக் குழுவினர் சார்பில் 4 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு விண்ணப்பம்: சிறப்பு தட்கல் முறையில் இன்று கடைசி நாள்
செவ்வாய் 16, ஜூன் 2026 10:43:17 AM (IST)

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:34:25 AM (IST)

மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:30:56 AM (IST)


