» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள், தேர்தல் முடிந்த பிறகு தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டுகின்றன என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இல்லை என்றுதான் கூறியுள்ளாரே தவிர, எப்போதும் இல்லை எனக் கூறவில்லை. கம்யூனிஸ்ட்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் நீடித்தனர், அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திடீரென அவர்களுக்கு ஏற்பட்ட மனசங்கடம் குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நேரத்தில் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதே கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க வேண்டியதுதானே? தற்போதைய சூழலில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனித்துவிடப்பட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை; ஏனெனில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பலம் திமுகவிற்கு உள்ளது."
திமுக கூட்டணிக் கட்சியினரை எந்த அளவிற்கு மதித்தது என்பதற்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு 'தகைசால் தமிழர் விருது' வழங்கியதே சான்றாகும். இந்த விருது திமுக தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. கொள்கையோடு கூட்டணிக்கு வந்தவர்களின் கொள்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இந்த அரசு என்ன மாற்றம் செய்து காட்டியது, திமுக என்ன தவறு செய்தது என்பதை கூட்டணியை விட்டு வெளியேறுபவர்கள்தான் விளக்க வேண்டும். எனினும், கூட்டணி இல்லை என்றாலே எங்கள் கட்சித் தொண்டர்கள் எப்போதும் தெம்பாகத்தான் இருப்பார்கள். மேலும், காங்கிரஸ் கட்சி எப்போதுமே கூடுதல் சுமைதான். திமுக காங்கிரசுக்கு ஒதுக்கிய 28 தொகுதிகளில் (திமுகவே) போட்டியிட்டிருந்தால் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்; தவெகவுக்கு 108 தொகுதிகள் கிடைத்திருக்காது."
ஸ்ரீவைகுண்டம் விவகாரம்
"தற்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு செயற்கையானதா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கேள்வி எழுகிறது. சினிமா பாணியில், இல்லாத ஒரு மின்வெட்டைத் திட்டமிட்டு ஏற்படுத்தி, பின்னர் அதனை ஒரே மாதத்தில் நிவர்த்தி செய்துவிட்டோம் என்ற பிம்பத்தை உருவாக்க யாரோ முயல்வது போலத் தோன்றுகிறது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியிலும் வெயில் கடுமையாகத்தான் இருந்தது, ஆனால் அப்போது இதுபோன்ற மின்வெட்டுகள் ஏற்பட்டதில்லை.
மேலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 10:23:33 AM (IST)

அரசியலில் நுழைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன் - நடிகர் ராகவா லாரன்ஸ்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:15:11 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய இளம்பெண் உள்பட 2பேர் கைது: 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
வெள்ளி 12, ஜூன் 2026 8:28:33 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)


