» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு: மீன்பிடி தகராறில் கொடூரம்!

சனி 6, ஜூன் 2026 8:56:30 AM (IST)

தூத்துக்குடியில்  மீன்பிடி தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலில், தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சீனி மகன் காந்தி (56) என்ற மீனவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன்களுக்கும் இடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகத் தொழில் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு விவேகானந்தர் நகர் கடற்கரை அருகில் காந்தி மற்றும் அவரது மகன்களான அசோக் குமார் (27), அஜய் (22) ஆகிய மூன்று பேரும் அமர்ந்து தங்களது மீன்பிடி வலைகளைப் பின்னிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேர் கொண்ட கும்பல், காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. 

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காந்தியை வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அவரது மகன்கள் அசோக் குமார், அஜய் ஆகியோருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது அருகே வலை பின்னிக் கொண்டிருந்த கருப்பண்ணன் மகன் பூசாரி (58) மற்றும் அவரது மகன் விஜி (32) ஆகியோர் ஓடிவந்து இந்த மோதலைத் தடுக்க முயன்றனர். 

ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கொண்ட கும்பல், தடுக்க வந்த பூசாரி மற்றும் விஜி ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த 5 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய செந்தில்குமார் மகன்கள் உட்பட 5 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே சமயத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. இதன் காரணமாக அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory