» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை!
திங்கள் 18, மே 2026 4:18:18 PM (IST)
சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து, சீனி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் பெரியாண் மகன் பாலகிருஷ்ணன் (51). இவர் சாத்தான்குளம் தாலுகா, புதுக்குளம் பகுதியில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக எடையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என்பதால், வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இன்று காலை 09:30 மணியளவில் மீண்டும் கடையைத் திறப்பதற்காகப் பாலகிருஷ்ணன் வந்துள்ளார். அப்போது, கடையின் முன்பக்கக் கதவின் பூட்டு லேசான முறையில் உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று கடையில் வைக்கப்பட்டிருந்த இருப்புப் பொருட்களை அவர் ஆய்வு செய்தார்.
அதில், கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை சீனி, 50 கிலோ எடையுள்ள 1 மூட்டை துவரம் பருப்பு, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 பாக்ஸ் பாமாயில் ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் கடை வளாகத்தைப் பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டுசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளனர்! - மு.க.ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 10:46:00 AM (IST)

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்!
திங்கள் 18, மே 2026 10:35:35 AM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

எடப்பாடியாருக்கு தூத்துக்குடி அதிமுக முழு ஆதரவு: எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தீர்மானம்!
திங்கள் 18, மே 2026 10:11:13 AM (IST)


