» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்
திங்கள் 11, மே 2026 4:57:02 PM (IST)

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அன்புமணி
வைகோவுடான சந்திப்பை தொடர்ந்து, சென்னை அக்கரையில் உள்ள பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இல்லத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். அவரை வாசல் வரை வந்து அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வரவேற்றனர். அன்புமணி குடும்பத்தினர் விஜய்யுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அன்புமணிக்கு பூங்கொத்து கொடுத்த விஜய், அவருடன் சிறிது நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.
சீமான்
பின்னர், நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேற்று மாலை 5.25 மணிக்கு வந்தார். விஜய் வருகைக்காக வழி மேல் விழி வைத்து வாசலிலேயே சீமான் காத்திருந்தார். விஜய் வந்ததும் அவரை ஆரத்தழுவி, கரம்பிடித்து தனது வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
அவர்கள் இருவரும் சிறிது நேரம் மனம் வீட்டு பேசினர். பூங்கொத்து கொடுத்த விஜய்க்கு, சீமான் பழக்கூடை வழங்கினார். 10 நிமிடங்களுக்கு மேல் விஜய் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு, அரசியல் நாகரிகமாக தலைவர்களை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்த நிகழ்வுகள் வீடியோ பதிவுகளாக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பலரும் அதனை வரவேற்று, கருத்திட்டதை பார்க்க முடிந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர்களுக்குச் சரிவு: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்கு!
வெள்ளி 15, மே 2026 11:21:36 AM (IST)

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை : பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
வெள்ளி 15, மே 2026 10:31:44 AM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)


