» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர்களுக்குச் சரிவு: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்கு!
வெள்ளி 15, மே 2026 11:21:36 AM (IST)

"நானே எல்லாம் என்று நினைத்த எடப்பாடியின் கனவு இன்று தூள்தூளாகிவிட்டது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்"
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகத்தில் ஒரு நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என இளைஞர்களும், பெண்களும் விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவிலேயே முதன்முறையாக ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முறையை வீழ்த்தி, பணபலம் இன்றி தேர்தலைச் சந்தித்த வரலாற்றை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டியுள்ளதாகப் பாராட்டினார்.
தற்போதைய அரசின் சாதனைகளாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம். பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள். கல்வி நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்றுதல். இவை அனைத்தும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் திட்டங்கள் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடிய செங்கோட்டையன் கூறியதாவது: "மக்கள் மீதும், கட்சியை வளர்த்த தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குத் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களைத் தவிர்த்து, தன் படத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி பாராட்டு விழா நடத்தியவர் இன்று எங்கே இருக்கிறார் என்பதை நாடே அறியும்."
தற்போதும் தனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் படமே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "நானே எல்லாம் என்று நினைத்த எடப்பாடியின் கனவு இன்று தூள்தூளாகிவிட்டது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது" என உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். மேலும், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை : பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
வெள்ளி 15, மே 2026 10:31:44 AM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 14, மே 2026 3:40:18 PM (IST)


