» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய் முதல் கையொப்பம்!

ஞாயிறு 10, மே 2026 11:22:04 AM (IST)



தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற  ச. ஜோசப் விஜய், பொறுப்பேற்ற சில நிமிடங்களிலேயே மக்கள் நலன் சார்ந்த மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையொப்பமிட்டு தனது ஆட்சியின் முதல் அதிரடியைத் தொடங்கியுள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பின், மேடையில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கோப்புகளில் விஜய் கையொப்பமிட்டார். அவரது முதல் கையொப்பமாக, "ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்" வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்திற்கான ஆணையில் கையெழுத்திட்டார். இது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் திட்டமாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை:

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதற்கான இரண்டாவது கோப்பில் கையொப்பமிட்டார். பெண்களுக்கான பிரத்யேகப் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த அதிரடிப்படை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான மூன்று கோப்புகளில் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மக்களிடையே உரையாற்றினார். தனது அரசின் கொள்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். முன்னதாக, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory