» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)
தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத் தவெக-வுக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த முடிவை வரவேற்றுள்ள ஸ்டாலின், "நெருக்கடியான காலத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தோழமைக் கட்சிகள் எடுத்துள்ள முடிவை மதிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.புதிய ஆட்சி அமைவதற்கு திமுக தடையாக இருக்காது. அதேவேளையில், சட்டப்பேரவையில் மக்களின் குரலாக, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகத் தனது கடமையைச் செய்யும். ஆட்சி அமைக்கத் தவெக-வுக்கு ஆதரவு அளித்தாலும், கொள்கை ரீதியாகத் தொடர்ந்து திமுக-வுடனேயே பயணிப்போம் என அறிவித்த கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலைவர்களுக்குத் எனது நன்றிகள்.
காங்கிரஸ் மீது விமர்சனம்:
"வெற்றி பெற்ற பின் நன்றி தெரிவிக்கக்கூட வராமல், ஒரே நாளில் உறவை முறித்துக்கொண்டு சென்ற காங்கிரஸ் கட்சியின் செயல் வருத்தமளிக்கிறது. திட்டங்களைத் தொடர வேண்டுகோள்: "கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான தொலைநோக்குத் திட்டங்களைப் புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்."
தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தலைத் திணிக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், தோழமைக் கட்சிகளின் முடிவை ஏற்றுக்கொண்டு, அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில், விரைவில் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் 10 லட்சம் கோடி கடன் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 11:28:51 AM (IST)

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய் முதல் கையொப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:22:04 AM (IST)

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்: நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலம்!
ஞாயிறு 10, மே 2026 11:15:05 AM (IST)

திமுகவின் மக்கள் நலத் திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின் விருப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:13:16 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
சனி 9, மே 2026 7:56:19 PM (IST)


