» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெற்றி - தோல்வியை சமமாகக் கருதி லட்சியப் பயணத்தை தொடருவோம்: கீதாஜீவன் அறிக்கை!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வெற்றி தேடித்தந்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதாஜீவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் மற்றும் திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தலைவர் வழியில், அரசியல் பொதுவாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி - தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது லட்சியப் பயணத்தை தொடருவோம். மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.
மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் அர்ப்பணிப்பான உழைப்பைத் தந்த தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
muthuமே 5, 2026 - 07:53:30 PM | Posted IP 172.7*****
ஒரு பக்கம் விஜய் அலை வீசினாலும் தங்களின் தோல்விக்கு கழக கண்மணிகள்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. அது என்ன வென்று உங்களுக்கே புரியும்.
மேலும் தொடரும் செய்திகள்

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர்களுக்குச் சரிவு: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்கு!
வெள்ளி 15, மே 2026 11:21:36 AM (IST)

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை : பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
வெள்ளி 15, மே 2026 10:31:44 AM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)



முனிய சாமிமே 7, 2026 - 05:41:22 PM | Posted IP 172.7*****