» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா 7-ஆம் திருநாள் : சிவப்பு சாத்தி கோலத்தில் நடராஜர் வீதி உலா!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:29:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஏழாம் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை அருள்மிகு நடராஜப்பெருமான் சிறப்பு 'சிவப்பு சாத்தி' அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஏழாம் திருநாளில், நடராஜப்பெருமான் சிவப்பு நிறப் பட்டு உடுத்தி, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 'சிவப்பு சாத்தி' கோலத்தில் காட்சியளித்தார். இந்தச் சிறப்பு அலங்காரத்துடன் தெப்பக்குளம் பிள்ளையார் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
மேள தாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் பஞ்சமூர்த்திகளுடன் நடராஜப்பெருமான் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். ரத வீதிகளில் வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாகத் தீபாராதனை காண்பித்துச் சுவாமி தரிசனம் செய்தனர். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய கோலத்தைக் கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்யினா பத்தாம் திருநாளான ஏப்ரல் 30-ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)


