» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:26:43 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகச் சட்டமன்றப் பொதுத் தேர்தல் கடந்த 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வருகிற மே 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள 62 மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் முறை:

காலை 8:00 மணி: தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

காலை 8:30 மணி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு இயந்திர வாக்குகளின் இறுதிச் சுற்று எண்ணிக்கை தொடங்கும்.

ஒவ்வொரு மையத்திலும் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திர வாக்குகளை எண்ணத் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO) மட்டத்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தபால் வாக்குகளைப் பொறுத்தவரை, 500 வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் எண்ணிக்கை நடைபெறும்.
தபால் வாக்குகள் விவரம்:

தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.36 லட்சம் அலுவலர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (1.73 லட்சம் பேர்) எனப் பல்வேறு பிரிவுகளில் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இதுவரை 18,000 சேவை வாக்காளர்கள் (Service Voters) வாக்களித்துள்ளனர்.

இவர்களின் தபால் வாக்குகள் மே 4-ஆம் தேதி காலை 8 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

மொத்தமாக, வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தவர்கள் தவிர்த்து, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு உள்ளிட்ட வசதிகள் மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory