» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி: தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் புகார்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:38 PM (IST)

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தினர் சென்னை தலைமைச் செயலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அச்சு மற்றும் காட்சி ஊடகப் பத்திரிகையாளர்களுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு நிகழ்வுகளைச் சேகரிக்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரிகள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளதாகப் பத்திரிகையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், களத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்துத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், தமிழக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-யிடம் விரிவான புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவில் "அடையாள அட்டை வழங்கலில் குளறுபடி செய்த மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகப் பத்திரிகையாளர்களுக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி, சீரான முறையில் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்று வலியுறத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர்கள் எம்.டி. ராமலிங்கம், பி.ஜி. பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் நா. வினோத் குமார், தென்சென்னை மாவட்ட தலைவர் அ. லட்சுமணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கழுகு வீரா மற்றும் சங்க செய்தி தொடர்பாளர் அருண் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)


