» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்னி பெயரின் முகப்பு பகுதி முழுவதுமாக சிதைந்து சேதமடைந்தது. இதில் ஆம்னி டிரைவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த ஆம்னி பேருந்து டிரைவர் பேருந்து முன் பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சிக்கி தவித்த டிரைவரை மீட்டனர்.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தினை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிமெண்ட் கலவை டேங்க் லாரியின் பிரேக் பிடிக்கும் பகுதி பழுது ஏற்பட்டதால் லாரியை அதன் டிரைவர் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கி என்பவர் நிறுத்தி கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடு செய்யாமல் நிறுத்தி இருந்ததாலும், அதிகாலை என்பதால் டேங்க லாரி நிறுத்தி இருப்பது தெரியாமல் அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து அதன் பின்பக்கத்தில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, டேங்கர் லாரி டிரைவர் கல்லிடைக்குறிச்சி இசக்கி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுப்பெண்: கோவில்பட்டியில் வைரலாகும் புகைப்படம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:58:43 PM (IST)

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்! - மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி சூசக பதில்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:47:49 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப் பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:23:28 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

