» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப் பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:23:28 PM (IST)
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 70% ஓட்டுப்பதிவாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 61.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.தலைநகர் சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் தொகுதியில் குடும்பத்துடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
சென்னையில் தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு அவரது கணவரும் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தர்.சி, நடிகர் ரஜினி காந்த், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சிவக்குமார், ஜீவா, நடிகை த்ரிஷா, நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா எனப் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்தனர்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுப்பெண்: கோவில்பட்டியில் வைரலாகும் புகைப்படம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:58:43 PM (IST)

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்! - மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி சூசக பதில்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:47:49 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

