» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுப்பெண்: கோவில்பட்டியில் வைரலாகும் புகைப்படம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:58:43 PM (IST)

ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தலில், கடமை உணர்வுக்குச் சான்றாக கோவில்பட்டியில் மணப்பெண் ஒருவர் திருமணமான கையோடு மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த நிகழ்வு பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கோவில்பட்டி வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனாவுக்கும், அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜனுக்கும் இன்று காலை கோவில்பட்டி சௌபாக்கியா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. உற்றார் உறவினர்கள் சூழ கோலாகலமாகத் திருமணம் முடிந்து, மணமக்கள் இல்லம் செல்லும் வேளையில், மணப்பெண் சுதர்சனா தனது வாக்கினைப் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, மணப்பெண் சுதர்சனா திருமணக் கோலத்திலேயே கோவில்பட்டி பார்க் சாலையில் உள்ள இலக்குமி ஆலை தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார். அங்கிருந்த பொதுமக்களும் தேர்தல் அலுவலர்களும் ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றனர். வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய அவர், அனைவரையும் கட்டாயம் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
"திருமணம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் வாக்குப்பதிவு" என மணப்பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த மதிய வேளையிலும், சற்றும் சளைக்காமல் மணக்கோலத்தில் வந்த சுதர்சனாவின் செயல் இளம் வாக்காளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்! - மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி சூசக பதில்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:47:49 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப் பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:23:28 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

