» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!

வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய சமூக விரோதிக்குச் சட்டப்படி உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையைத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் எப்போதும் துணையாக இருப்போம்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதைச் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் உறுதிப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory