» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் - திரிஷா பங்கேற்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 8:26:45 AM (IST)
சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தம்பி சுரேஷ் கல்பாத்தியின் மகன் அபிஷேக் கல்பாத்தி - விஷாலா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினர். சந்தன நிற பட்டு வேட்டி சட்டையில் விஜய்யும், அதே நிறத்தில் சேலை அணிந்து திரிஷாவும் வந்து மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

